×
Saravana Stores

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று 3வது நாளாக நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 4,992 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 5,451 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 5 ஆயிரம் கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 106.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 106.07 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 72.93 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Mettur ,Okanagan Cauvery ,Dinakaran ,
× RELATED 90 ஆண்டுகளில் முதல்முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை!