×
Saravana Stores

தேன்கனிக்கோட்டைக்கு 10 யானைகள் விரட்டியடிப்பு

 

ஓசூர், நவ.18: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து, 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், ஓசூர் அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் கடந்த 12ம் தேதி இடம்பெயர்ந்தன. இந்த யானை கூட்டம் மெதுவாக சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்து, அங்கு பல குழுக்களாக பிரிந்தன. அந்த பகுதியில் நெல், ராகி தக்காளி பீன்ஸ் முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களை சேதப்படுத்தி வந்தன. பால் நிரம்பும் தருவாயில் நெல், ராகி, சோளம் உள்ளிட்ட பல பயிர்கள் உள்ளதால் சேதப்படுத்தி விடும். உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு இடம்பெயர்ந்த யானைகளை கட்டுப்படுத்த, 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். யானைகள் இரவோடு இரவாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு பட்டாசு ெவடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டினர். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post தேன்கனிக்கோட்டைக்கு 10 யானைகள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Hosur ,Dhenkanikottai forest ,Oodedurgam forest ,Sanamavu Forest ,
× RELATED ஓசூர் கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கு...