×
Saravana Stores

போலி நகை அடகு வைத்து ரூ.11 லட்சம் நூதன மோசடி: 4 பேர் கைது

புழல்: செங்குன்றம் அடுத்த விளாங்காடுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (48). இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஆட்டோ ஸ்டாண்டில் எண்ணூர் சுனாமி நகரைச் சேர்ந்த தங்கதுரை (42) ஆட்டோ ஓட்டி வருகிறார். இருவரும் நீண்ட நாள் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் தென்காசி மாவட்டம் வி.கே புதூர் தாலுகா மேல தெரு ருக்மணி அம்மன்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கி துரை (27), குமார் (39), கோயம்புத்தூர் தெலுங்குபாளையம் ராஜி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் (44) ஆகியோர், தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்று பணம் பெற்று தருமாறு தெரிவித்தனர்.

அதன்பேரில், செங்குன்றம் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 அடகு கடைகளில் 29 சவரன் நகைகளை வைத்து ரூ.11 லட்சத்து 65,000 பெற்றுக் கொண்டு சென்றனர். அந்த நகைகளை சேதனை செய்தபோது, போலியான தங்க நகைகள் என தெரிய வந்தது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் செங்குன்றம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கதுரை, சுப்பிரமணி, ஸ்ரீதர், இசக்கி துரை ஆகிய 4 பேரை கைது செய்தனர். 4 பேரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலி நகை அடகு வைத்து ரூ.11 லட்சம் நூதன மோசடி: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ramakrishnan ,Chennai Central Railway Station ,Thangadurai ,Tulur Tsunami ,
× RELATED மாநிலக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில்...