அண்ணாநகர்: சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த 2 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 7ம் வகுப்பு பயிலும் தனது 12 வயது மகளை காணவில்லை என தெரிவித்து இருந்தார்.
விசாரணையில், சாலிகிராமம் பகுதியை சேர்ந்த பம்மி (25) என்பவர், சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது. அவரது செல்போன் சிக்னலை கண்காணித்தபோது, திருப்பதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் திருப்பதிக்கு சென்று, அங்கு ஒரு வீட்டில் இருந்து சிறுமியை மீட்டனர்.
பின்னர், சிறுமியை கடத்தி சென்ற பம்மியை பிடித்து விசாரித்தனர். அதில், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதும், அதை மறைத்து சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக கடத்தி சென்று, பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பம்மியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post சிறுமியை கடத்தி பலாத்காரம் 2 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது appeared first on Dinakaran.