×
Saravana Stores

தேசிய பத்திரிகை தின கருத்தரங்கம்

திருப்பூர், நவ.17: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பாக தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது. மாணவப் பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். அவர் பேசுகையில், ‘‘பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தொடங்கப்பட்ட இந்நாளில் வருடா வருடம் தேசிய பத்திரிக்கை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் 4வது தூணாக பத்திரிகை மற்றும் ஊடகம் விளங்குகிறது. மக்கள் பிரச்னைகளை சுதந்திரமாக பிரசுரம் செய்து அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று அவற்றை தீர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் மாணவர்கள் நேசித்து பத்திரிகைகளை வாசிக்க வேண்டும். அவ்வாறு செய்வோமானால் புத்தகங்களை படிக்கும் பழக்கம் தானாக ஏற்படும். போட்டி தேர்வுக்கு தேவையான சில குறிப்புகளை பத்திரிகையிலிருந்து எடுத்து கொள்ளலாம். குறைந்தது 30 நிமிடமாவது பத்திரிக்கைகளை வாசிக்க வேண்டும்’’ என்றார். இதன் பின்னர் மாணவ செயலர்கள் மது கார்த்திக், நவீன் குமார், ஜெயலட்சுமி, விஸ்வ பாரதி ஆகியோர் தலைமையில் மாணவர்களுக்கு பத்திரிக்கைகளை கொடுத்து வாசித்தனர்.

The post தேசிய பத்திரிகை தின கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : National Journalism Day Seminar ,Tirupur ,Tirupur Chikkanna Government Arts College National Welfare Project Unit-2 ,National Journalism Day ,Krishnamurthy ,Coordinator ,Mohankumar ,Dinakaran ,
× RELATED திருப்பூர் தெற்கு வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு