×
Saravana Stores

ஐயப்பன் அறிவோம் நீ நானாக…!

கன்னிச்சாமியாக முதன்முதலில் ஐயப்பனை தரிசிக்கும்போது அந்த அடர்ந்த மலை காட்டுப்பகுதிக்கு ஏற்றவாறு மனம், உடல் அமைய வேண்டும் என்பதற்காகவும், பிரம்மச்சரிய முறைக்காகவும், அவதார நோக்கத்திற்காக ஐயப்பன் காட்டிற்குள் செல்லும்போது கடைப்பிடித்த விரத நெறிமுறையை, வளர்ப்பு தந்தை ராஜசேகர பாண்டியனுக்கு உபதேசமாக வழங்குகிறார். அந்த முறையே இன்றும் பின்பற்றப்படுகிறது. அதன்படி மலைக்கு செல்லும்போது மன்னராக இருந்தாலும் கூட எளிமையாக இருக்க வேண்டும்.

ஐயப்பனுக்கு மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை செல்வது ஒன்றும் சாதாரண விசயமாக பார்ப்பது கிடையாது. காரணம், பக்தன் ஐயப்பனை பார்ப்பதை விட, ஐயப்பன் பக்தனை பார்க்கிறார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனாலேயே மாலை அணிந்துவிட்டால் உன்னை தவிர எனக்கு எவருமில்லை. நீயே எனக்கு கதி என்ற அர்ப்பணிப்பு சுய ஒழுக்கம், கட்டுப்பாடு நியமனங்களுடன் கூடிய பிரம்மச்சரிய விரதமுறையை பின்பற்றி நடக்க வேண்டும்.

ஒருவர் மாலை அணிந்தவுடன் சாமி ஐயப்பனாகவே அழைக்கப்படுகிறார். இதனால் மாலை அணிந்தவுடன், சக மனிதர்களால் சாமி என்று அழைக்கப்படுகிறார். அவரும் மற்றவர்களை அவ்வாறே அழைக்கிறார். ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஐயக்கியமாகி விடுவதால், ‘‘நீ நானாக ஆகிறேன்’’ என்ற முழு நம்பிக்கையோடு விரத முறையை கடைபிடித்து சபரிமலை வந்து செல்லும்போது வாழ்விலும் ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றினால், நான் நீயாக ஆகிறேன் என ஐயப்பனே வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

கையில் ஆயுதங்களின்றி, சின்முத்திரையோடு தவக்கோலத்தில் ஐயப்பன் இருப்பதால் அவர் தண்டிக்கும் தெய்வமாக கருதப்படுவதில்லை. ஆனால், அவர் வகுத்த விரத நெறிமுறையில் சிறிதேனும் தவறு ஏற்படும்பட்சத்தில் விரதம் முழுமை பெறுவதில்லை. எந்தவித பலனும் இல்லை. அந்த நேரத்தில் ஐயப்பன் முழுமையாக விலகி சென்று விடுவார்.

இறை நிலையை அடைய வேண்டும் என்றால் குறிப்பாக காமம் (ஆசை), குரோதம் (பகை), லோபம் (பேராசை), மோகம் (ஆசையால் உருவாகுதல்), மதம் (திமிர்), மாற்சரியம் (ஆசைப்பட்டதை அடைதல்), பயம் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  பக்தன் முழு பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்து தனது ஐம்புலன்களையும் அடக்கி, ஒழுக்க நெறிமுறையுடன், சிந்தனை, செயல் எல்லா நேரமும் ஐயப்பனை நோக்கி இருக்க வேண்டும்.

* (நாளை தரிசிப்போம்)
சபரிமலையில் நாளை அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை

இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு

The post ஐயப்பன் அறிவோம் நீ நானாக…! appeared first on Dinakaran.

Tags : Ayyappan ,Kannichami ,Rajasekhara Pandyan ,
× RELATED சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ ஐயப்பன் கவசம்