சிவகாசி, நவ.15: சிவகாசி தாலுகா அலுவலக சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி தாலுகா அலுவலகம் முன்பாக சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் வந்து செல்லும் பிரதான சாலை சேதமடைந்த நிலையில் மீண்டும் சாலை அமைக்க ஜல்லி கற்கள் தூவப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தாலுகாஅலுவலகத்திற்கு வரும் முதியோர் நிலை தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கூறுகையில், சிவகாசி தாலுகா அலுவலகம் முன்பாக சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டினர். ஆனால் அதன்பிறகு எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் மக்களின் கால்களை ஜல்லி கற்கள் பதம் பார்க்கின்றன. எனவே உடனடியாக சாலை பணியை முடிக்க வேண்டும் என்றனர்.
The post சிவகாசி தாலுகா அலுவலகம் முன் கால்களை பதம் பார்க்கும் ஜல்லிகற்கள் appeared first on Dinakaran.