×
Saravana Stores

பழநி பாலாறு, குதிரையாறு அணைகளில் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு: 9,875 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

சென்னை, நவ. 15: தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பழநி வட்டம் தாடாகுளம் பாசன பரப்பான 844 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 6168 ஏக்கர் நிலங்களுக்கும் என மொத்தம் 7012 ஏக்கர் பழைய பாசன நிலங்களுக்கு முதல்போக பாசனத்திற்கு 15.11.2024 முதல் 15.03.2025 முடிய 120 நாட்களுக்கு பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 1464.56 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பழநி வட்டம் புதச்சு, பாலசமுத்திரம் கிராமங்களிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும்.

*பழநி வட்டம் ஆண்டிபட்டி கிராமம் குதிரையாறு அணையின் இடது பிரதான கால்வாய் மற்றும் பழைய பாசனப் பரப்பு ஆகியவற்றுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 1981.59 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 882.27 ஏக்கர் நிலங்களுக்கும் என மொத்தம் 2863.86 ஏக்கர் நிலங்கள் முதல்போக பாசனம் பெறும் வகையில் 15.11.2024 முதல் 15.03.2025 வரை 120 நாட்களுக்கு இடது பிரதான கால்வாய் வழியாக 103.68 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், 5 அணைக்கட்டுகளின் பாசன பரப்பு மற்றும் நேரடி பாசன பரப்பிற்கு 165.89 மில்லியன் அடிக்கு மிகாமலும் என மொத்தம் 296.53 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பழநி, மடத்துக்குளம் வட்டங்களிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும்.

The post பழநி பாலாறு, குதிரையாறு அணைகளில் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு: 9,875 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் appeared first on Dinakaran.

Tags : Palani Palaru ,Khodyaar dams ,Chennai ,Additional ,Chief Secretary ,Water Resources Department ,Government of Tamil Nadu ,Palani Vattam Tadakulam ,Old Ayakattu ,Dinakaran ,
× RELATED பழனி பாலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதை...