×
Saravana Stores

சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு: தியாகராஜ சுவாமி கோயிலில் அன்னாபிஷேகம்

திருவாரூர், நவ. 15: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி வன்மீகநாதர் மற்றும் அசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆலயங்களில் மட்டும் ஐப்பசி மாத அசுபதி நட்சத்திரத்தன்று இந்த அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று இந்த அசுபதி நட்சத்திர தினத்தையொட்டி திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலின் மூலவரான வன்மீகநாதர் மற்றும் அசலேஸ்வரர் சுவாமிகளுக்கு இந்த அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் 60 கிலோ எடையிலான அரிசி மூலம் சாதம் தயார் செய்யப்பட்டு அதனை கொண்டு 2 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் அந்த சாதமானது பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் அழகியமணாளன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

The post சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு: தியாகராஜ சுவாமி கோயிலில் அன்னாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Legislative Assessment Committee ,Thyagaraja Swamy Temple ,Tiruvarur ,Vanmeekanathar ,Azaleswarar ,Annabhishekam ,Tiruvarur Thyagaraja Swamy Temple ,Shiva ,Tamil Nadu ,Aipasi ,Thiruvannamalai ,Chidambaram… ,
× RELATED குமரியில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு..!!