சென்னை: சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் அமைக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு போலீஸ் பூத்திலும் 10 காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். சென்னையில் உள்ள 19 மருத்துவமனைகளில் ஏற்கனவே 9 மருத்துவமனைகளில் காவல் நிலையம், பூத்துகள் அமைக்கபப்ட்டுள்ளது. மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்துகள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
The post சென்னையில் அரசு மருத்துவமனைகளில் போலீஸ் பூத் appeared first on Dinakaran.