×
Saravana Stores

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், ‘காலமுறை ஊதியம் வழங்குதல், பணிக்கொடையாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்குதல், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு வழங்குதல்’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக நியமித்து காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,Chennai ,Former ,Chief Minister ,O. Panneer Selvam ,Sathunavu ,Anganwadi ,Tamil Nadu ,
× RELATED மதுரையிலிருந்து சென்னை வந்தபோது...