×
Saravana Stores

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக வங்கக் கடலில் கடந்த வாரம் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, பின்னர் அது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளிலும், வட தமிழகத்திலும் கனமழை பெய்தது. இந்நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்ந்து சென்றதால் மழையும் குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். மேலும் 19ம் தேதி வரை தமிழகம் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Bay of Bengal ,Tamil Nadu ,North Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னையில் பெய்து வரும் தொடர் மழை; விமானங்கள் தாமதத்தால் பயணிகள் அவதி!