×
Saravana Stores

குரு பகவான் வியாழக்கிழமை வழிபாடு..!!

நவகிரகங்களில் குரு பகவானின் அருளை பெறுவதற்கு வியாழக்கிழமை நாம் செய்யும் காரியங்கள் உதவியாக இருக்கும். குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.குருவின் தோஷங்களை போக்கவும் இந்த உபாயங்கள் அபயமளிக்கும். குருவிற்கு உரிய நாளாக கருதப்படும் வியாழனன்று என்ன செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்…வியாழன் அன்று பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் பல என்றாலும், கிரகங்களின் அனுகிரகம் கிடைக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்தது. தொழில், வியாபாரத்தில் வெற்றி கொடுக்கும் குரு பகவான், வாழ்க்கையில் நல்ல துணையையையும் கொடுப்பார். எனவே தான் வியாழனன்று தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவானுக்கு பூஜைகள் செய்வதும் விரதம் இருப்பதும் தொன்று தொட்டு இருக்கும் வழக்கம். தோஷங்களில் இருந்து விடுபட குரு பகவானை வழிபட சிறந்த வழிகள் என்றால் முதலில் விளக்கு போடுவதை சொல்லவேண்டும். எந்தவொரு தெய்வத்தையும் வணங்கும்போது விளக்கேற்றுவது அவசியம். அதிலும் குருஓரையில் செய்யும் பூஜைகளும், விளக்கிடுவதும் மிகவும் நல்லது. குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள் என்பதால், மஞ்சள் கிழங்கு வைத்து பூஜிப்பதும், மஞ்சளை தானமாக கொடுப்பதும் நல்லது. கொண்டைக்கடலை மாலையை கோர்த்து குரு பகவானுக்கு மாலையாக சாற்றி வழிபடவும். வியாழனன்று மஞ்சள் நிற ஆடை அணியவும். விநாயகர் வழிபாடு குரு பகவானின் அருளைப் பெற்றுத் தரும். குருவுக்கு உகந்த புஷ்பராகத்தை அணிவது நல்லது

 

The post குரு பகவான் வியாழக்கிழமை வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Guru ,Bhagavan ,Navagrahas ,
× RELATED குரு தத்துவம்