சென்னை: பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதற்காக இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கேட்டார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி, உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். கோவையில் அக்.27-ல் நடந்த கூட்டத்தில் ஓம்கார் பாலாஜி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் முன்ஜாமின் கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 9-ம் தேதி ஓம்கார் பாலாஜியிடம் கோவை போலீசார் விசாரணை நடத்தினர். பல மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்ட ஓம்கார் பாலாஜி முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். முன்ஜாமின் மனு ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்துகொண்டு பொறுப்பற்ற வகையில் எப்படி பேசலாம் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் பேசிவிட்டதாக ஓம்கார் பாலாஜி அளித்துள்ள விளக்கத்தை ஏற்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள அரசியல்வாதி இதுபோன்ற காரணங்களை கூறக்கூடாது என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுறுத்தினார்.
The post மிரட்டல் பேச்சு: ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார் இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி!! appeared first on Dinakaran.