×

கடற்கரையில் நடக்க முடியாமல் தடுமாறும் ஜோ பைடன்: வீடியோ வைரல்

வாஷிங்டன்: கடற்கரையில் நடக்க முடியாமல் தடுமாறும் அதிபர் ஜோ பைடன் விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை குடியரசு கட்சியின் டிரம்ப் வீழ்த்தினார். இதன் மூலம் அமெரிக்காவின் 47வது அதிபர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்த தேர்தலில் போட்டியிட்ட போது தவறாக பெயர்களை உச்சரித்து கடும் விமர்சனங்களை ஜோ பைடன் எதிர்கொண்டார்.

இதன் காரணமாக அதிபர் தேர்தலிலிருந்தே விலக நேரிட்டது. இந்நிலையில் ஜோ பைடன், தனது டெலாவர் வீட்டுக்கு அருகே மணற்பாங்கான கடற்கரையில் நடந்து செல்லும்போது, அவர் தடுமாறுவதும், அவருக்கு ஜில் பைடன் உதவும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. 81 வயதை எட்டியுள்ள பைடன், ஒரு குழந்தையை போல சரியாக நடக்க முடியாமல் மெல்ல, மெல்ல தடுமாறியபடியே நடந்து செல்கிறார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post கடற்கரையில் நடக்க முடியாமல் தடுமாறும் ஜோ பைடன்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Joe Biden ,Washington ,Chancellor ,US presidential election ,Kamala Harris ,Democratic Party ,
× RELATED சிரியா அதிபர் அல் ஆசாத்தின்...