×

நாமக்கல்லுக்கு இன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வருகை

நாமக்கல், நவ.11: நாமக்கல் மாவட்டத்திற்கு, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் இன்று வருகை தர உள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 29ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை புதிய வாக்காளர்கள். தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்வது தொடர்பாக சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

வருகிற 16ம் தேதி (சனிக்கிழமை), 17ம் தேதி (ஞாயிற்றுகிழமை), 23ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்த நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை, அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

எனவே, 18 வயது பூர்த்திடைந்த அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி, அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், ஆர்டிஓ, தாசில்தார் அலுவலகங்களுக்கு உடனே சென்று தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம்களை பார்வையிடவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும், நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளராக, தமிழ்நாடு உப்பு கழக மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (11ம் தேதி) நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை பார்வையிடுகிறார். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

The post நாமக்கல்லுக்கு இன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வருகை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,District Collector ,Uma ,Dinakaran ,
× RELATED இன்று அனுமன் ஜெயந்தி விழா; ஆஞ்சநேயர் கோயிலில் 500 போலீசார் பாதுகாப்பு