சென்னை: குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 9491 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள், தங்கள் சான்றிதழை நவம்பர் 9ம் தேதி(நேற்று) முதல் வருகிற 21ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று டின்பிஎஸ்சி அறிவித்தது. இதையடுத்து தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வர்கள் இறுதி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
The post இறுதி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுங்கள்: குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள் appeared first on Dinakaran.