×

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பம்

சிவகங்கை, நவ.10:அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:2024,2025ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்யும் ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு வழங்கப்பட உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் விருது பெற விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள், சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அணுகி உரிய ஆவணங்களுடன் 20.11.2024க்குள் விண்ணப்பத்தினை நேரில் சமர்ப்பிக்கலாம்.

The post அம்பேத்கர் விருது பெற விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Shivaganga ,Asha Ajit ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகை எதிரொலி:...