×

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, நவ.10: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஆஷாஅஜித், தலைமை வகித்தார். இதில் காப்பீட்டுத்திட்ட அட்டை காலதாமதமின்றி கிடைக்கவும், மருத்துவ சிகிச்சைக்கான கட்டண நிலுவைத் தொகை பெறுவது காலதாமதமின்றி கிடைக்கவும், ஓய்வூதியதாரர்களுக்கான அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்க செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் துறை சார்ந்த அலுவலர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஓய்வூதியதாரர்கள் 18 கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, சென்னை ஓய்வூதிய இயக்குனரக கணக்கு அலுவலர் அருள் மற்றும் முதுநிலை கண்காணிப்பாளர் ரிச்சர்ட்பேட்ரிக், மாவட்ட கருவூல அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தகுமாரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pensioner ,Sivagangai ,Sivagangai Collector ,Collector ,Asha Ajith ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமனம் கோரி கலெக்டரிடம் மனு