சென்னை: நெட் தேர்வுக்கான பாடத் தொகுதியில் புதிதாக ஆயுர்வேதா உயிரியல் பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நெட் தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும். இந்த தேர்வுக்கான தொகுதியில் தற்போது தமிழ், வரலாறு, பொருளியல் உட்பட 100க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.
இதன் தொடர்ச்சியாக நெட் தேர்வுக்கான பாடத் தொகுதியில் புதிதாக ஆயுர்வேதா உயிரியல் பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி. செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்கலைக்கழக மானியக்குழுவின் 581வது குழுக்கூட்டம் கடந்த ஜூன் 25ம் தேதி நடத்தப்பட்டது. இதில் நிபுணர் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், நெட் தேர்வு தொகுதியில் ஆயுர்வேதா உயிரியல் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டிசம்பர் பருவத்துக்கான தேர்வில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
The post நெட் தகுதித் தேர்வில் புதிதாக ஆயுர்வேதா உயிரியல் பாடம்: யுஜிசி அறிவிப்பு appeared first on Dinakaran.