×

ப்ரியங்களுடன்…

நன்றி குங்குமம் தோழி

* விதைகள் கொண்ட பட்டாசுகள் தயாரித்து வழங்குவது எப்படி? அதன் சிறப்புப் பண்புகள் எவை என்பதை விளக்கிய கட்டுரை சுற்றுச் சூழல் பாதுகாப்பு சிறப்புச் சார்ந்தது. தேன் வியாபாரம் செய்தாலும் தேவையான லாபத்தைத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளக்கியிருந்தார் ேகாயம்புத்தூர் ராஜேஷ்.- செல்வராஜ், கரூர்.

* நம்முடைய உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கால்தான். இவைகளை பாதுகாக்க காலணிகள் தயாரித்து வழங்கும் வாக்… கரோ… அதுவும் 4 நிமிடத்தில் 40 ஜோடி காலணிகள் தயாரிப்பது என்றால் சும்மாவா… மலைக்க வைத்தன. அது மட்டுமல்லாமல் ஷூக்களை எப்படி தயாரிப்பது என்பதை துல்லியமாக கூறியது சிறப்பு!- வண்ணை கணேசன், சென்னை.

* படிப்பை பாதியிலே விட்டு விட்டு தனி மரமாய் நிலை குலைந்து தவிப்பவர்களுக்கு ரமேஷின் ‘லயம்’ நிறுவனம் ஆதரவுக்கரம் நீட்டி வருவது வணங்கத்தக்கது.
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

* ‘நியூஸ் பைட்ஸ்’ல் ‘ஃப்ரூட் மோமோஸ்’ தகவல் மிகவும் இனிப்பாக இருந்தது. புராணச் சிறப்புகள் மிகுந்த முருக நாதேஸ்வரர் திரு முருகன்பூண்டியில் அருளும் ஆன்மிகத் தகவல்கள் அறிந்தோம்.- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

* கறிவேப்பிலை பற்றி மிகவும் அறிய வேண்டிய தகவல்கள்… அறிவியல் முதல் ஆரோக்கியம் வரை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை… ருசியும் மணமும் தந்து வாசகரை வசியம் செய்து விட்டது மந்திர மூலிகை!- டி.மாணிக்கம், திருச்சி.

* ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு தினமும் உணவு அளிக்கும் சுதர்ஷன்-வித்யா தம்பதியின் கொடை உள்ளம் பிரமிக்க வைக்கிறது. நாமும் சிறிய அளவிலாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.- ஜி.இந்திரா, திருச்சி.

* வெற்றுக்காகிதம் சிறுகதை ‘பெற்ற மனம் பித்து… பிள்ளை மனம் கல்லு’ என்பதை உற்றதொரு கதையால் சொல்லி பெற்ற மகன், மருமகள் துரோகத்தை தூள் தூளாக்கி, பெற்ற பணத்தை
திருப்பித்தந்து, வெற்றுக்காகிதமாக்கிய பெற்றோர் கார்மேகம், மரகதம் பெற்றதே வெற்றி.- டி.மாணிக்கம், திருச்சி.

* பாச உணர்வை பிறருக்குக் காட்டும் பொழுது மனம் ஒளிர்கிறது. உறவுகளின் பாசம் நமக்குத் தாய், தந்தையையே காட்டிவிடுகிறது. தாய்ப்பால் காட்டும் உறவுகள் படித்ததும் மனம் மெய்சிலிர்க்க வைத்தது.- ஜி.ராஜேஸ்வரி, சென்னை.

அட்டைப்படம்: குஷ்பு

புகைப்படம்: விகாஸ்ராஜா

மேக்கப்: சரண்யா

The post ப்ரியங்களுடன்… appeared first on Dinakaran.

Tags : Priyam… ,Priyam ,Dinakaran ,
× RELATED ?ஒருவருக்குச் செல்வம் சேரச்சேர...