- அமைச்சர்
- செந்தில்பாஜி
- முதல்வர்
- எம். யூ கே. ஸ்டாலின்
- கோவா
- பெரியார் நினைவு நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் அறக்கட்டளை
- காந்திபுரம்
- தையுமனவராய்
- அமைச்சர் செண்டில் பாலாஜி அலுகம்
கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 நாள், களஆய்வு பணிக்காக கடந்த 5, 6ம் தேதிகளில் கோவை வந்தார். அப்போது, அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 2ம் நாள் நிகழ்ச்சியாக காந்திபுரத்தில் பெரியார் நினைவு நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டி பேசினார். அதாவது, ‘‘செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக இருந்தபோது, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார். தீவிர களப்பணி ஆற்றி வந்த அவருக்கு, சிலர் தடைகளை ஏற்படுத்தினர். ஆனாலும், அவற்றை எல்லாம் உடைத்து கொண்டு, மீண்டும் வந்துள்ளார். அவர் முன்பைவிட இன்னும் வேகமாக, சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்றார்.
முதல்வரின் இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தடைகள் வந்த போதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன். முதல்வரின் ஆணைக்கு இணங்க, களப்பணியாற்றி, நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி, கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
The post தடைகள் வந்த போதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கினார் முதல்வர்: அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம் appeared first on Dinakaran.