×

முக்காணியில் கீழே விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த எலக்ட்ரீசியன் உடல் உறுப்புகள் தானம்

*உடலுக்கு அரசு மரியாதை

ஆறுமுகநேரி : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள முக்காணி பரதர் தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (65). எலக்ட்ரீசியனான இவர் கடந்த 2ம் தேதி தனது வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். உயரமான நாற்காலியில் நின்று கொண்டு மின்விசிறி மாற்றும் போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காது வழியே ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து தீவிர மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜேம்ஸ் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகள் மதுரை தனியார் மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டு அவரது உடல் சொந்த ஊரான முக்காணிக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து அவரது உடல் நேற்று காலை முக்காணி புனித அந்தோனியார் ஆலயத்தில் இறுதிச்சடங்கு திருப்பலி நடந்தது. பின்னர் ஜேம்ஸ் உடலுக்கு அரசு சார்பில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ சுகுமாறன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

The post முக்காணியில் கீழே விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த எலக்ட்ரீசியன் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : James ,Trikani Bharadar Street, Tuthukudi District, Atur ,Dinakaran ,
× RELATED போதை பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர் மீது வழக்கு பதிவு