×

விதிமீறிய வாகனங்களுக்கு ரூ7.57 லட்சம் அபராதம்

அரூர், நவ.6:அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். கடந்த மாதம் 408 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது உரிமம் இன்றி இயக்கிய ஆம்னி பஸ், சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது, அதிக பாரம் ஏற்றி வாகனங்கள், அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் உள்ளிட்ட 84 வாகனங்களுக்கு வரியாக ரூ3,62,975ம், அபராதமாக ரூ3,94,025 என மொத்தம் ரூ7.57 லட்சம் விதிக்கப்பட்டது. மேலும், முறையான ஆவணம் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் கூறுகையில், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்த கூடாது, கட்டாயம் தலை கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். வாகனத்தில் பம்பர்களை அகற்ற வேண்டும் என்றார்.

The post விதிமீறிய வாகனங்களுக்கு ரூ7.57 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Kulothungan ,Aroor Bypass Road ,Gopinathambatti Road ,Samiyapuram Road ,Manjawadi Pass ,Dinakaran ,
× RELATED மறியலில் ஈடுபட்ட 23 பேர் மீது வழக்கு