×

பாம்பன் புதிய பாலம் நவ. 20ல் பிரதமர் திறப்பு?: ‘கலாம் சேது’ என பெயர் சூட்ட திட்டம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிதாக இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. இந்த புதிய ரயில் பாலம், பணிகள் நிறைவு பெற்று உள்ளது. பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் முடிந்து உள்ள நிலையில், பிரதமர் மோடி நவம்பர் 20ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக 2 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் நவ. 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்கள், பாம்பன் புதிய ரயில் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்யவுள்ளனர்.

இந்த ஆய்வில் இந்திய ரயில்வேயின் அனைத்து பிரிவு முதன்மை அதிகாரிகள் மற்றும் ஆர்விஎன்எல் முதன்மை பொறியாளர்கள் குழுவினர் கலந்து கொள்வர். சிஆர்எஸ் ஆய்வுக்கு பின் பாலத்தில் ரயிலை இயக்க அனுமதி வழங்கப்படும் என ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாலத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே.அப்துல் கலாமின் பெயரை பாலத்துக்குச் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி வரு, நிலையில். ‘கலாம் சேது’ என பெயர் சூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

The post பாம்பன் புதிய பாலம் நவ. 20ல் பிரதமர் திறப்பு?: ‘கலாம் சேது’ என பெயர் சூட்ட திட்டம் appeared first on Dinakaran.

Tags : Pampan New Bridge ,Rameswaram ,Pampan Sea ,Ramanathapuram district ,
× RELATED பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 75 கி.மீ...