புதுடெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் உள்ள எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேற்று சந்தித்து, குழுவின் தலைவர் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக புகார் கூறினர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து ஆராய திமுக எம்பி ஆ.ராசா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவராக பாஜவின் ஜகதாம்பிகா பால் உள்ளார். இந்நிலையில், குழு தலைவர் ஜகதாம்பிகா தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், குழுவில் இருந்து வெளியேறுவோம் என, சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தனர். இந்நிலையில், குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், நேற்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து, ஜகதாம்பிகா பால் குறித்து புகார் கூறினர்.
The post பாஜ எம்பி ஜகதாம்பிகா அடாவடி சபாநாயகரை நேரில் சந்தித்து புகார் கூறிய எதிர்க்கட்சி எம்பிக்கள் appeared first on Dinakaran.