×

திமுக-காங். கூட்டணி வலிமையாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி


இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ெசல்வப்பெருந்தகை திமுக- காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாக தெரிவித்தார். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே வீரப்பம்பாளையத்தில் காங்கிரஸ் சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தியும், கிராம காங்கிரஸ் கமிட்டி தொடக்க விழா மாநாடும் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் கிராம கமிட்டி அமைக்க இருக்கிறோம். நவம்பர் 5ம் தேதி தொடங்கி டிச 5ம் தேதி முடிய இந்த பணி நடக்கும்.

சோனியா காந்தி பிறந்த தினமான டிசம்பர் 9ம் தேதி கன்னியாகுமரியில் கிராம தரிசனம் என்ற அமைப்பை ஏற்படுத்த இருக்கிறோம். ஜனவரி மாதம் பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. இந்த கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. காமராஜரின் கருத்துக்களையும்,அவரையும் யார் வேண்டுமானாலும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். காமராஜரை சொந்தம் கொண்டாட காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

The post திமுக-காங். கூட்டணி வலிமையாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK-Cong ,Selvaperundhai ,Ethapadi ,Tamil Nadu Congress ,President ,Esalvaperunthakai ,Congress ,Salem district ,DMK-Congress ,Veerappampalayam ,Selvaperunthakai ,
× RELATED நான் எம்எல்ஏவாக தொடர்வது அமைச்சர்...