×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை கேளம்பாக்கம் அருகே கானத்தூர் பகுதியை சேர்ந்த ரஹமதுல்லா (40) இதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி விளையாடிக் கொண்டிக்கும் போது சிறுமியை ஏரிக்கரைக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதே போல் கானத்தூர் பகுதியை சேர்ந்த சாகுல்ஹமீது (43) இவரது மகளும் 12 வயது சிறுமியும் நண்பர்கள் அப்போது தோழி வீட்டிற்க்கு விளையாட சென்று 12 வயது சிறுமிக்கு சாகுல்அமீது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றொரிடம் தகவல் தெரியபடுத்தினர்.

சிறுமியின் பெற்றொர் கடந்த 2019 ஆம் ஆண்டு கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் இருவரை கானத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்தது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலிதேவி ஆஜரானார் வழக்கை விசாரித்த நீதிபதி நசிமாபானு குற்றவாளியான ரஹமதுல்லா மற்றும் சாகுல்அமீது ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும் தலா இருவருக்கும் 3500 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENGALPATU BOXO COURT ,Chennai ,Rahmadulla ,Kanathur ,Kelambakkam, Chennai ,Chengalpattu Boxo Court ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...