×

சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட 406.55 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அழிப்பு

 

கும்மிடிப்பூண்டி, நவ. 5: தீபாவளி கொண்டாட்டித்தின்போது சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு எரியூட்டி அழிக்கும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் தீபாவளி அடுத்த நாளான கடந்த ஒன்றாம் தேதி 92.78 டன் பட்டாசு கழிவுகளும், அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 167.55 டன் பட்டாசு கழிவுகளும், நேற்று 146 டன் பட்டாசு கழிவுகள் கொண்டுவரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை மொத்தமாக நேற்றுமுன்தினம் மாலை நான்கு மணி விவரப்படி 406.55 மெட்ரிக் டன் எடை கொண்ட பட்டாசு கழிவுகள் கொண்டுவரப்பட்டு அழிக்கப்பட்டன.

நான்காவது நாளாக நேற்றும் லாரிகள் மூலம் பட்டாசு கழிவுகள் சென்னை மாநகராட்சியில் இருந்து கொண்டுவரப்பட்டு தொழிற்சாலையின் முன் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளது. இறுதி நாளான நேற்று சுமார் 50 முதல் 100 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் இந்த தொழிற்சாலையில் அப்புறப்படுத்த வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலையில் அப்புறப்படுத்தப்படும் பட்டாசு கழிவுகளால் காற்று மற்றும் நிலம் மாசுபடாத வகையில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை திடக்கழிவு மேலாண்மை துறை சென்னை கார்ப்பரேஷன் உதவி பொறியாளர் ராஜேஷ், தொழிற்சாலையின் பொது மேலாளர் ஸ்ரீதர் ரெட்டி, பொறுப்பு அதிகாரி சீனிவாச ரெட்டி மற்றும் மனித வள மேலாளர் விவேக் ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

The post சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட 406.55 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Municipality ,Kummidipundi Chipkot ,Kummidipundi ,Chennai Municipal Corporation ,Diwali ,
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்...