லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகராகவும், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகராகவும், லாகூர் திகழ்கிறது. இந்நகரில் காற்றின் தரக்குறியீடு வரலாறு காணாத வகையில், 280 ஆக உயர்ந்துள்ளது. அந்நகரில் வீசும் காற்றில் கலந்துள்ள நுண்துகள் அடர்த்தி, 450 ஆக அதிகரித்துள்ளது. லாகூர் முழுவதும் சாம்பல் நிறத்துடன் புகை மூட்டமாக காற்று வீசுவதால், குழந்தைகள், முதியோர் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் புகும் காற்று அதிகளவில் மாசு கலந்து நச்சுத்தன்மையுடன் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் இந்திய அரசு அலட்சியமாக இருப்பதாகவும், பஞ்சாப் மாகாண தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்மா பொகாரி, லாகூரில் நிருபர்களிடம் நேற்று கூறினார். இதனால், ஒரு வாரத்துக்கு, நகரில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சாம்பல் நிறத்தில் வீசும் மாசடைந்த காற்றால் லாகூர் மாநகர மக்கள் பீதி: இந்தியாவே காரணம் என பாக்., குற்றச்சாட்டு appeared first on Dinakaran.