×

நீலகிரியில் கனமழை: உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் நவ. 3ம் தேதி வரை மழை இயல்பை விட 19 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 253.1 மி.மீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், தற்போது 301.1 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இதனால் நீலகிரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: டோல்ப்ரீ எண்: 1077, 0423-2450034, 0423-2450035 மற்றும் வாட்ஸ்அப் எண்: 9943126000.

The post நீலகிரியில் கனமழை: உதவி எண்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Chennai ,Tamil Nadu Government ,Tamil Nadu ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு அறுவடை பணிகள் மும்முரம்