×

வேட்டவலம் அடுத்த தளவாய்குளத்தில் பாசி படர்ந்த குளத்தை சீரமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

கீழ்பென்னாத்தூர் : வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் வாரச்சந்தை அருகே பாசி படர்ந்துள்ள குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் பகுதியில் வாரந்தோறும் ஞாயிறுக்கிழமை நடைபெறும் கால்நடை சந்தை மிகவும் பெயர் பெற்றது. இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடு, கோழி, ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த கால்நடைகளை வாங்குவதற்காக கீழ்பென்னாத்தூர், திருக்கோவிலூர், வீரபாண்டி, வைப்பூர், ஆவூர் மற்றும் அவலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

இந்நிலையில், தளவாய்குளம் கால்நடை வாரச்சந்தை நடைபெறும் அருகாமையில் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் பல மாதங்களாக பாசி படர்ந்துள்ளது. இதனால் குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பொதுமக்களும், வாரச்சந்தைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாசி படர்ந்துள்ள குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேட்டவலம் அடுத்த தளவாய்குளத்தில் பாசி படர்ந்த குளத்தை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vettavalam ,Talavaikulam ,Kilipennathur ,Thalawaikulam market ,
× RELATED சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...