×

ஊட்டியில் மழை காரணமாக மலை ரயில் சேவை ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி: தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மேலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரியின் மலை சார்ந்த பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மலை ரயில் செல்லும் தண்டவாள பாதை மீது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக மலை ரெயில் பாதையின் பல இடங்களில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஒருநாள் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதன்படி இன்று (3-11-2024) மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post ஊட்டியில் மழை காரணமாக மலை ரயில் சேவை ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : rail ,Railway administration ,Nilgiri ,Tamil Nadu ,North Tamil Nadu ,South Tamil Nadu ,Puducherry ,Karar Rain ,Mountain Rail ,Feeder Rain ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: ரூ.67.2...