×

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை: 2024 அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது; “நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 06.10.2024 அன்று 4,00,042 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, அக்டோபர் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 28,88,168 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 4,287 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,400 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,75,666 பயணிகள் (Online QR 1,73,620; Paper QR 21,74,338; Static QR 2,62,757; Whatsapp – 5,78,048; Paytm 4,40,000; PhonePe – 3,48,378; ONDC – 98,525), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,50,699 பயணிகள் மற்றும் Airshow Event (06.10.2024) Manual Passenger Entry @ அரசினர் தோட்டம் மெட்ரோ 59,776 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Metro Rail Administration ,Chennai Metro ,Chennai ,Chennai Metro Rail Company ,Metro Rail ,
× RELATED 2024 நவம்பர் மாதத்தில் 83.61 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்!