×
Saravana Stores

போலீசாரிடம் அநாகரிகமாக நடந்த விவகாரம் சந்திரமோகன், தனலட்சுமியின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலட்சுமியும் போலீசாரை ஆபாசமாக திட்டினர். இதையடுத்து, மயிலாப்பூர் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரினார். மனுக்களை விசாரித்த நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post போலீசாரிடம் அநாகரிகமாக நடந்த விவகாரம் சந்திரமோகன், தனலட்சுமியின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chandramohan ,Dhanalakshmi ,Madras Principal Sessions Court ,CHENNAI ,Chandra Mohan ,Thanalakshmi ,Chennai's Marina Loop Road ,Mylapore ,Chennai Principal Sessions Court ,Dinakaran ,
× RELATED மெரினாவில் ரகளை செய்த பெண்: ஜாமின் கோரி மனு