×

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி

சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து விலை தாறுமாறாக உயர்ந்து வருவதை காண முடிந்தது. தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில், ரூ.57 ஆயிரத்தை நெருங்கியும், பின்னர் குறைவதும் என தங்கம் விலை இருந்தது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாத இறுதியில் தங்கம் சவரனுக்கு ரூ.59,640-க்கும் கிராமுக்கு ரூ.7,455-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், நவம்பவர் மாத தொடக்கநாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080-க்கும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,385க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், கடந்த 23ம் தேதி உச்சத்தை தொட்ட நிலையில், அதன் பின்னர் விலை குறைந்தது. அதன்பின்னர் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

The post தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள காவலர்களுக்கு பயண அட்டை