×
Saravana Stores

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்து. 2023-24ம் ஆண்டில் கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 215/ வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்தார்.

அதையே உறுதி செய்து தீபாவளிக்கு முன்பு அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் இத்தொகை வழங்கப்படும் என்று அரசின் சார்பில் செய்தி குறிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதால், தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் ஊக்கத்தொகை கிடைக்காத கரும்பு விவசாயிகள் இந்தாண்டு தீபாவளியை வழக்கமான உற்சாகத்தில் கொண்டாட முடியாமல் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Secretary General ,Edappadi Palanisamy ,Chennai ,General Secretary ,Edappadi Palanisami ,Legislative Assembly ,
× RELATED துரோகம்” தியாகத்தைப் பற்றி பேசுவது...