×
Saravana Stores

முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை : இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் தீபாவளி 2024 மற்றும் பொங்கல் 2025 ஆகிய பண்டிகைக்கு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்படுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவை பின்வருமாறு :

1. முதியோர் ஓய்வூதிய திட்ட (OAP) பயனாளிகளின் விவரங்கள் தமிழ்நாடு மின்னாளுமை முகமைக்கு (TNEGA) கூடுதல் தலைமைச் செயலாலர் / ஆணையாளர் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அவர்களால் பகிரப்படும்.

2. தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் (TNEGA) பொது விநியோகத் திட்ட (PDS) தரவுகளுடன் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர், வருவாய் நிர்வாகம் மற்றம் பேரிடர் மேலாண்மைத் துறை அவர்களால் பகிரப்பட்ட முதியோர் ஓய்வூதிய திட்ட (OAP) பயனாளிகளின் விவரங்களை ஒப்பீடு செய்யப்படும்.

3. மேற்படி, ஒப்பீடு செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம், கடை குறியீடு, மின்னணு குடும்ப அட்டை எண் (UFC) மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளி விவரம் ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மற்றும் கூட்டுறவுத் துறைக்கு (RCS) தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் (TNEGA) பகிரப்படும்.

4. தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் (TNEGA) பகிரப்பட்ட இலவச வேட்டி. சேலை வழங்கப்பட வேண்டிய முதியோர் ஓய்வூதிய திட்ட (OAP) குடும்ப அட்டைதாரர்களின் விவரப்பட்டியல் கடை வாரியாக சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மற்றும் கூட்டுறவுத் துறையால் (RCS) வழங்கப்பட வேண்டும்.

5. இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவதற்காக நியாய விலைக் கடை விற்பனை முனைய இயந்திரத்தில் (ePOS) ‘OAP இலவச வேட்டி சேலை” எனும் பெயரில் புதிய மெனுவினை Oasys திட்ட ருங்கிணைப்பாளரால் உருவாக்கப்பட வேண்டும். மேலும், TNeGA-வில் பகிரப்படும் உரிமை அளவுகள், ஒதுக்கீடு ஆகியவற்றினை பொது விநியோகத் திட்ட MIS இணையத்தள பின்புலத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும்.

6. நியாய விலைக் கடை பணியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு விற்பனை முனைய இயந்திரம் முலமாக (ePOS) பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட வேண்டும். விரல் ரேகை / கருவிழி ரேகை இருவழியாகவும் சரிப்பார்ப்பு தோல்வுயுறும் பட்சத்திலும் அங்கீகார சான்று மூலம் தற்சமயம் பொது விநியோக திட்ட பண்டங்கள் வழங்கப்படும் இடங்களிலும் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும். அதன்படி உரிய பதிவேட்டில் கையொப்பம் மற்றும் செல்பேசி எண் பெற்று விநியோகம் மேற்கொள்ளலாம்.

The post முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Vetti ,CHENNAI ,festival of Diwali 2024 ,Pongal 2025 ,Dinakaran ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி