×
Saravana Stores

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுச் சான்றிதழ் வழங்கினார். பின்னர் பேசிய அவர்; முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களை பாராட்டுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்க ஆண்டுதோறும் ரூ.6.5கோடி ஒதுக்கப்படுகிறது. புத்தாய்வு திட்டத்தில் நிறை பயிற்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரை ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இந்த அளவுக்கு ஊதியத்தை போல ஊக்கத்தொகை கொடுப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள், அடுத்த தலைமுறையினருக்கும் வழிகாட்ட வேண்டும் என்று கூறினார்.

The post எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dravidian model government ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,Dravida model government ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்