×
Saravana Stores

ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரிய திமுக வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் திமுகவை இணைத்து எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில்; போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுக-வை தொடர்புபடுத்தி பேசியதாகவும்,

இதனால் திமுக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது. இதனால் எக்ஸ் வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரியும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது; வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரிய திமுக வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : IMUKA ,ICOURT ,EDAPPADI PALANISAMI ,Chennai ,Chennai High Court ,Edapadi Palanisami ,Dimuka Organization ,DIMUGA ,JABAR SATHIK ,Dimuka ,Dinakaran ,
× RELATED ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்