×
Saravana Stores

தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு சென்னியம்மன் கோயிலை மூழ்கடித்து செல்லும் வெள்ள நீர் செங்கம் அடுத்த நீப்பத்துறை

செங்கம்,அக்.24: செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னியம்மன் கோயிலை மூழ்கடித்து வெள்ளநீர் செல்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் நேற்று மாலை முதல் நீர் வரத்து அதிகமாகி பொதுமக்கள் பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் உள்ள சென்னியம்மன் கோயிலில் வெள்ளநீர் புகுந்ததால் பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சாத்தனூர் அணை நீர்மட்டம் மள மளவன உயர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு சென்னியம்மன் கோயிலை மூழ்கடித்து செல்லும் வெள்ள நீர் செங்கம் அடுத்த நீப்பத்துறை appeared first on Dinakaran.

Tags : Tenpenna River ,Senniamman temple ,Neepappathara ,Sengam ,Neepapatara, Sengam ,Chennyamman temple ,Thiruvannamalai district ,Neeppattara ,
× RELATED திருக்கோவிலூர் அருகே...