×
Saravana Stores

ராஜபாளையம் அருகே குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து: விரிவுபடுத்த மக்கள் கோரிக்கை

 

ராஜபாளையம், அக்.23: ராஜபாளையம் அருகே குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர். ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் செல்லும் சாலையை சிலம்பராபுரம், பட்டியூர், தேசிகாபுரம், கூனங்குளம், நக்கனேரி, கொல்லங்கொண்டான் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய விவசாயிகள், தொழிலாளர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை பல இடங்களில் ஒருவழிப்பாதை போல் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் பஸ்கள் உள்ளிட்ட நான்குசக்கர வாகனங்கள் சென்றுவருவருவதில் சிரமம் ஏற்படுகிறது. நான்குசக்கர வாகனங்கள் வரும்போது அவற்றுக்கு வழிவிடுவதற்காக டூவீலரில் செல்பவர்கள் வயலுக்குள் இறங்கி நிற்கும் அளவிற்கு குறுகலாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை சற்று விரிவுபடுத்த வேண்டும்.

மேலும் சாலையோரம் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், எங்களது பகுதிக்கு வரக்கூடிய சாலையில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஒரு வழி பாதையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி நடந்து வருகிறது. இப்பகுதிகளை தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை மூலம் சாலையை விரிவுபடுத்தி மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

The post ராஜபாளையம் அருகே குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து: விரிவுபடுத்த மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,South Venkanallur ,Silambarapuram ,Pattiyur ,Desikapuram ,Koonangulam ,Nakaneri ,
× RELATED ராஜபாளையம் அருகே வாழை,...