×
Saravana Stores

திருச்செந்தூர் கோயிலில் இலவச திருமணம்

திருச்செந்தூர், அக். 22: இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உரிய தகுதிகள் பெற்ற இணைகளுக்கு திருக்கோயில் நிதி மூலம் 4 கிராம் தங்க தாலி உட்பட ₹60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதன் அடிப்படையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் நேற்று காலை ஒரு இணைக்கு திருமணம் நடந்தது. ஏற்கனவே இலவச திருமணத்திற்கு முன்பதிவு செய்திருந்த சிவகாசியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகாராஜாவுக்கும், விருதுநகரை சேர்ந்த மாயாண்டி மகள் மாரியம்மாளுக்கும் கோயில் சண்முக விலாசம் மண்டபத்தில் திருமணம் நடந்தது.

நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் சுதாகர், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி செண்பகராமன் மற்றும் திருமண வீட்டார் கலந்து கொண்டனர். தொடர்ந்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் மணமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

The post திருச்செந்தூர் கோயிலில் இலவச திருமணம் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Hindu Society Charities Department ,
× RELATED புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு...