×

18 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம்: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மழையிலும் திரண்ட பக்தர்கள்


திருமலை: திருமலையில் இன்று 2வது நாளாக நீடித்த சாரல் மழையால் குடைபிடித்தபடி பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 73,891 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,423 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில், ₹3.53 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

திருமலையில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று 2வது நாளாக சாரல் மழை நீடிக்கிறது. மழையை பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி சென்று பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்பளக்சில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசிக்கின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post 18 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம்: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மழையிலும் திரண்ட பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Swami ,Tirupathi Elumalayan Temple ,
× RELATED திருப்பதியில் பிரம்மோற்சவம் நிகழ்ச்சியில் தேரோட்டம் கோலாகலம்