- தேசிய பெண்கள் கால்பந்து போட்டி
- ஆர்எம்கே பள்ளி
- திருவள்ளூர்
- சிபிஎஸ்இ
- பள்ளிகள்
- RMK குடியிருப்பு மூத்த மேல்நிலைப் பள்ளி
- கவரப்பேட்டை
- சென்னை
- ஆர்.எஸ்.முனிரத்தினம்
- ஆர்எம்கே கல்வி குழுமம்
திருவள்ளூர், அக்.11: சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே ரெசிடென்சியல் சீனியர் செகண்டரி பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேசிய மகளிர் கால்பந்து போட்டிகள் 3 பிரிவுகளாக நடைபெற்று வந்தது. இதன் பரிசளிப்பு விழாவிற்கு ஆர்எம்கே கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு, செயலாளர் எலமஞ்சி பிரதீப், துணைத் தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர், துர்கா தேவி பிரதீப், நிர்வாக அறங்காவலர் சௌமியா கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சப்னா சங்க்லா அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தேசிய பளு தூக்குதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கஸ்தூரி ராஜாமணி, இந்திய கால்பந்து வீராங்கனை லாவண்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு 3 பிரிவுகளிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பதக்கங்களை வழங்கினர். விழாவில் கஸ்தூரி ராஜாமணி பேசுகையில், பெண்கள் என்றாலே பிரச்சனைகள் வரத்தான் செய்யும், பிரச்சனையை கண்டு நாம் பின்வாங்க கூடாது, துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
The post ஆர்எம்கே பள்ளியில் தேசிய மகளிர் கால்பந்து போட்டி வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை appeared first on Dinakaran.