- பொன்னேரி
- ராஜ்குமார்
- ராமரெட்டிப்பாளையம்
- Meenjur
- திருவள்ளூர் மாவட்டம்
- தடா, ஆந்திரப் பிரதேசம்
- கௌசிக்
- Kesavapuram
பொன்னேரி, அக்.11: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த ராமாரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). இவர், ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கவுசிக் (6), கேசவபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வருகிறான். நேற்று முன்தினம் காலை கடைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து சிறுவன் வெளியே வந்துள்ளான். அப்போது, பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வந்த 2 நாய்கள் கவுசிக்கை சுற்றி வளைத்தன. இதில், சிறுவன் கவுசிக் தப்ப முயற்சி செய்தும் அந்த நாய்கள் விடாமல் சிறுவனை தலை மற்றும் கை, கால்களில் கடித்துக் குதறின. இதனையடுத்து, சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், நாய்களை துரத்திவிட்டு சிறுவனை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சிறுவனை கடித்து குதறிய பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய்கள் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.