×

ராசிபுரம் நகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க பஞ்.தலைவர்கள் எதிர்ப்பு

நாமகிரிப்பேட்ைட, அக்.11: ராசிபுரம் அருகே ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ராசிபுரம் அடுத்த பொன்குறிச்சி, சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, கூனவேலம்பட்டி, குறுக்குபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளை, ராசிபுரம் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக, திமுக, பாஜக என 11 ஊராட்சி மன்ற தலைவர்கள், ராசிபுரம் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை ரத்து செய்யக்கோரி, ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். குறுக்குபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில், ‘ஊராட்சிகளை ராசிபுரம் நகராட்சியுடன் இணைத்தால், பல்வேறு சலுகைகள் கிடைக்காது. 100 நாள் வேலை வாய்ப்பு கிடைக்காது. எங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், வருங்காலங்களில் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்,’ என்றார்.

The post ராசிபுரம் நகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க பஞ்.தலைவர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Panj ,Rasipuram ,Namakrippetida ,panchayat ,Ponkurichi ,Chandrasekharapuram ,Kaundampalayam ,Murungapatti ,Koonavelampatti ,Krassapuram ,Panj.leaders' ,
× RELATED ராசிபுரம் அருகே மளிகை கடையில் குட்கா...