×

மீனவர் பிரச்னைக்கு உரிய தீர்வு இலங்கையுடன் ஒன்றிய அரசு கண்டிப்போடு பேச வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 21 பேர் 4 விசைப்படகுகளில் நெடுந்தீவு கடற்பரப்பு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாகை மாவட்ட வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீன்பிடிச்சாதனங்களை சேதப்படுத்துவதும் நடைபெறுகிறது. எனவே ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் கண்டிப்போடு பேசி, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post மீனவர் பிரச்னைக்கு உரிய தீர்வு இலங்கையுடன் ஒன்றிய அரசு கண்டிப்போடு பேச வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Sri ,Lanka ,GK Vasan ,CHENNAI ,Tamil State Congress ,President ,Pudukottai district ,Jagadapatnam ,Kottapatnam ,Sri Lankan Navy ,Neduntivu beach ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி...