×
Saravana Stores

கரூர் ஜவஹர் பஜாரில் போக்குவரத்து நெரிசல்

 

கரூர், அக். 10: வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு உள்ள ஜவஹர் பஜாரில் வாகன நிறுத்தத்தை முறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மனோகரா கார்னர் பகுதியில் இருந்து மார்க்கெட் வரை ஜவஹர் பஜார் உள்ளது. இந்த பஜாரின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. கருர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து தரப்பு மக்களும் ஜவஹர் பஜார் வந்து தேவையான பொருட்களை இந்தப் பகுதிக்கு வந்துதான் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ள இந்த பஜாரில் முறையாக வாகன நிறுத்தம் செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக அவ்வப்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, பண்டிகை நாட்களில் மிக அதிகளவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிறுவனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த பகுதியில் வாகன நிறுத்தத்தை முறைப்படுத்தி, எளிதான போக்குவரத்து நடைபெற வழி வகை செய்ய வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

 

The post கரூர் ஜவஹர் பஜாரில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Karur Jawahar Bazaar ,Karur ,Jawahar Bazar ,Jawahar Bazaar ,Manokara Corner ,Karur Corporation ,Karur Jawahar Bazar ,Dinakaran ,
× RELATED கரூர்-தாராபுரம் நெடுஞ்சாலையில்...