×

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளி போக்சோவில் கைது

 

மேட்டுப்பாளையம்,அக்.10: காரமடை பகுதியில் வசித்து வருபவர் 5 வயது சிறுமி. இவர் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த போது, காரமடையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனால் பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து காரமடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காரமடையை சேர்ந்த கூலித்தொழிலாளி பத்திரசாமி(45) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளி போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Mettupalayam ,Karamadai ,
× RELATED சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...